|
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்,
இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே; நயன் இலன் என்பது சொல்லும் - அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும்.
அறிவித்தலும் பயனளவிற் சொல்லுதலை ஒக்குமாதலின் 'சொல்லும்' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே
அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில், அவன்மீது எல்லாருக்கும் வெறுப்புண்டாகும்.) ஒரு சபையில் பிறருக்குப் பாரமாக அலுப்புண்டாகும்படி வீண் வார்த்தைகளை அதிகமாகப் பேசுகின்ற பேச்சே, பயனற்றவன் என்பதை வெளியாக்கிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பயனொன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுப்படுத்தி உரைக்கின்ற உரையானது அவன் நீதி இல்லாதவன் என்பதனைச் சொல்லிக் காட்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பயனில்லாத சொற்களையே ஒருவன் பேசிக்கொண்டிருப் பானாயின், அவன் சொற்களே அவன் எதற்கும் தகுதியில்லாதவன் என்பதை உணர்த்தி விடும்.
|
|
Translation
|
|
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.
|
|
Explanation
|
|
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue".
|
|
Transliteration
|
|
Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|