|
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில்
பதரென்று சொல்லுக,
இது மக்கட் பண்பிலனென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பயன் இல பல்லார்முன் சொல்லல் -ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல் ; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விரும்பப்படாத செயல்களைத் தன் நண்பரிடத்துச் செய்தலினுந் தீயதாம்.
நயத்தல் விரும்புதல். நயம் விருப்பம். 'நயன்' போலி. அறிவுடையோர்க்குப் பயனில் சொல்லின் மீதுள்ள வெறுப்பின் அளவைக் கூறியவாறு.
|
|
கலைஞர் உரை:
|
|
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச்
செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவமானம் மட்டுமல்ல) பலபேருக்கும் முன்னால், வீண் வார்த்தைகளைப் பேசுவது, நண்பர்களிடத்தில் விரும்பத்தகாத குற்றங்களைச் செய்வதைவிடத் தீமை உண்டாக்கக் கூடியது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
விரும்பத் தகாத செயல்களை நண்பர்களிடம் செய்வதை விடப் பயனொன்றும் இல்லாத சொற்களை அறிவுடையார் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் தீதானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பலர்முன்பு பயனில்லாத சொற்களைப் பேசுதல், நலமில்லாத செயல்களை நண்பர்களுக்குச் செய்தலைவிடத் தீதானது.
|
|
Translation
|
|
Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.
|
|
Explanation
|
|
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
|
|
Transliteration
|
|
Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seydhalir Reedhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|