|
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்,
இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும்; புறங்கூறான் என்றல் இனிது - ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப்படுதல் நன்றாம்.
புறங்கூறாமை அக்குற்றங்களினும் மேம்பட்டுத் தோன்றும் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற
சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு
நல்லது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஒருவன் அறம் என்பதையே அறியாதவனாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தாலும் அவன் கோள் சொல்ல மாட்டான் என்பது சிறப்புடையது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் அறத்தினைச் செய்யாமல் தீயவற்றைச் செய்தாலும் கூடப் 'புறங்கூறாதவன்' என்று மக்களால் சொல்லப்படுதல் நல்லதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் தன் வாழ்வில் அறம்கூறி நில்லாதவனாய் அறம் பற்றி வாழாதவனாய் இருப்பினும் தீதன்று; அவன் பிறர் பற்றிப் பழித்துக் கூறும் பண்பில்லாதவனாய் வாழ்தல் நன்று.
|
|
Translation
|
|
Though virtuous words his lips speak not, and all his deeds are ill
If neighbour he defame not, there's good within him still
|
|
Explanation
|
|
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
|
|
Transliteration
|
|
Arangooraan Alla Seyinum Oruvan
Purangooraan Endral Inidhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|