|
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]
|
|
மணக்குடவர் உரை:
|
|
விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்.
இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின், அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - பிறன் பொருளை விரும்பாமை யென்னும் பெருமிதம் ஒருவனுக்கு வெற்றியைத் தரும்.
முடிவு பொருளிழந்தாராலும் அரசனாலும் நேர்வது. "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியமை காண்க (சிலப். 20 - 64). வெற்றி வெஃகுவார் எல்லார் மீதும் ஆசை மீதுங்கொண்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள
விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால்
வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) ஆலோசனை செய்யாமல் பிறருடைய பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசை கொண்டால், உள்ள செல்வமும் அற்றுப் போகும். அபகரித்து வரும் செல்வத்தை வேண்டாமென்று விலக்கிவிடுதலே வெற்றி தரும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பின்னர் விளைவது அறியாமல் வெஃகுதல் செய்தால் அவனுக்கு முடிவினை உண்டாக்கும்; வேண்டாமை என்கின்ற செல்வத்தன்மையானது வெற்றியினைக் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறர் பொருள் விழையாத பேராண்மை வெற்றியைத் தரும். அறநிலை பிறழ்ந்து பிறர்பொருள் வெஃகின் அழிவே நேரும்.
|
|
Translation
|
|
From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.
|
|
Explanation
|
|
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
|
|
Transliteration
|
|
Iraleenum Ennaadhu Veqkin Viraleenum
Ventaamai Ennunj Cherukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|