|
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை,
இது செல்வ மழியாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செல்வத்திற்கு அஃகாமை யாது எனின் - ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு வழி எதுவெனின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறனுக்குத்தேவேயான அவனது கைப்பொருளைத்தான் விரும்பாமையாம்.
அஃகாமை இங்கு ஆகு பொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால்
பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று
ஆசைப்படாமலிருக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(செல்வம் உயராது என்பது மட்டுமல்ல. உள்ள செல்வமும் அதனால் போய்விடலாம். ஆகவே) குறையாத செல்வம் எதுவென்றால், இன்னொருவனுக்குச் சொந்தமான பொருளை அபகரிக்க நினைக்காமலிருப்பதுதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செல்வமானது குறைந்து போகாமல் இருப்பதற்குக் காரணம் யாதென்று ஆராய்ந்தால், அது மற்றவனுக்கு உரிமையான பொருளினைத் தான் விரும்பாதிருத்தல் வேண்டும் என்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் தம் செல்வத்திற்கு குறைவு ஏற்படாதிருக்க விழைவாராயின் பிறர்பொருள் மீது ஆவல் கொள்ளாதவராய் இருத்தல் வேண்டும்.
|
|
Translation
|
|
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!.
|
|
Explanation
|
|
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.
|
|
Transliteration
|
|
Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai
Ventum Pirankaip Porul
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|