|
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர்.
இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நடுவு அன்மை நாணுபவர் - நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர்; படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்குண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.
'நடுவு' தமவும் பிறவும் ஒப்ப நாடிப் பிறவுந் தம்போற் பேணுதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர்
தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில்
ஈடுபடமாட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அநியாயம் செய்ய அஞ்சுகிறவர்கள், அப்போதைக்கு வரக்கூடிய நன்மைகளைமட்டும் கருதிப் பிறர்பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டுப் பழிச் சொல்லுக்கு ஆளாகக்கூடிய குற்றங்களைச் செய்யமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நடுவு நிலைமை இல்லாதிருப்பதற்கு அஞ்சுபவர்கள் பின்னர் வரும் பயனை விரும்பிப் பழிக்கு ஆளாகக் கூடிய செயல்களை செய்ய மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நடுவுநிலைமை தவறுவதற்கு அஞ்சுபவர் பிறர் பொருளைக் கவர்ந்து அதனால் அடையும் பயனை விரும்பிப் பாவச் செயல்களைக் செய்ய மாட்டார்கள்.
|
|
Translation
|
|
Through lust of gain, no deeds that retribution bring,
Do they, who shrink with shame from every unjust thing.
|
|
Explanation
|
|
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
|
|
Transliteration
|
|
Patupayan Veqkip Pazhippatuva Seyyaar
Natuvanmai Naanu Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|