|
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம்,
இது சந்தான நாச முண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நடுவு இன்றி நல் பொருள் வெஃகின்-பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமையில்லாது அவரது நற்செல்வத்தின்மேல் ஒருவன் ஆசைவைப்பின்; குடிபொன்றி - அவன் குடிகெட்டு; குற்றமும் ஆங்கே தரும் - அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கேதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.
அறவழியில் ஈட்டப்பட்டு நல்வழியிற் செலவிடப்பெறும் செல்வத்தை 'நன்பொருள்' என்றார். பொன்றி என்பது பொன்றியபின் என்னும் பொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக்
கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து
சேரும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நீதியில்லாமல் பிறருக்குச் சொந்தமான பொருளைக் கவர்ந்துகொள்ள ஆசைப்பட்டால் அது ஒருவனுடைய குடும்பத்தைக் கெடுத்துப் பல குற்றங்களையும் உண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நடுவு நிலைமையில் இல்லாமல் பிறர்க்குரிய பொருளை வஞ்சித்துக் கொள்ள எண்ணினால் அந்த இச்சை அவனுடைய குடியைக் கெடுத்துக் குற்றத்தினையும் அப்போதே கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நடுவுநிலைமை பிறழ்ந்து ஒருவர் பிறர்பொருளைக் கவர்ந்து கொள்ள விழைந்தால் அவர் குடும்பப் பெருமை குன்றுவதுடன் தீராத பழியும் வந்து சேரும்.
|
|
Translation
|
|
With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.
|
|
Explanation
|
|
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
|
|
Transliteration
|
|
Natuvindri Nanporul Veqkin Kutipondrik
Kutramum Aange Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|