|
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
இது பழியுண்டா மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எளிது என இல் இறப்பான் - பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்தொழுகுபவன் ; விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன்குடிப்பழியையும் அடைவான்.
'இல்லிறப்பான்' என்பது இல்லத்தின்கண் கொல்லப்பட்டுச் சாவான் என்றும் பொருள்பட்டு இரட்டுறலாய் நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்
முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
செல்வத்தாலும் செல்வாக்காலும் இந்தக் குற்றத்தை எளிதாகச் செய்துவிடலாம். ஆனால் அதன் விளைவு.) எளிதாகக் கிடைக்கிறதென்று இலேசாக மதித்துப் பிறனுடைய மனைவியிடத்துக் கொண்ட காம ஆசையினால் நெறி கடந்து நடந்து கொள்ளுகிறவன், என்றும் நிலைக்கக்கூடிய பழியை அடைவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறகு நடப்பதை அறியாமல் எளிமையானதென்று நினைத்துப் பிறனுக்குரிய இல்லாளிடத்தில் நெறிகடந்து செல்லுகிறவன் எக்காலத்திலும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியினை அடைவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எளிதாகக் கைகூடும் எனக்கருதி பிறருடைய மனைவியை விரும்பித் துய்க்க எண்ணுபவனை என்றுமே அழியாது நிற்கின்ற பெரும்பாவம் பற்றித் தொடரும்.
|
|
Translation
|
|
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.
|
|
Explanation
|
|
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
|
|
Transliteration
|
|
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum
Viliyaadhu Nirkum Pazhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|