Thirukural

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி.

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?
தேவநேயப் பாவாணர் உரை:
தாம்உடைய நெஞ்சம் தமர் அல்வழி-நம் உறுப்பாகவுள்ள உள்ளமே ஒருவர்க்கு உறவல்லாத விடத்து; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்-அயலார் உறவல்லாதவராக இருத்தல் மிக எளிதாகக் காணக்கூடிய செய்தியே யாகும். புறத்தி யொருத்தியைக் காதலியென்று கருதி என் உள்ளமே என்னை வருத்தும்போது, அப்புறத்தி புலக்கின்றதில் என்னை வியப்புள்ளது என்பதாம், ’தமர்’ ஆகுபொருளி. ’தஞ்சம்’ எளிமைப் பொருளிடைச் சொல். தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே ." (தொல். சொல். இடை. 18.)
கலைஞர் உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சொந்த மனமே கைவிட்ட ஒருவரை நிச்சயமாக மற்றவர்கள் மதிக்கமாட்டார்கள்.) ஒருவருக்கு அவருடைய மனமே உதவியற்றதாகி விட்டால் மற்ற யாரும் உதவி செய்யமாட்டார்கள். ஆதலால், என் மனமே எனக்கு நீதான் உதவி செய்ய வேண்டும். நான் உன் அடைக்கலம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவருக்குத் துன்பம் வந்துற்றபோது உரித்தாகப் பெற்ற நெஞ்சம் தம்மவராகாதிருந்தால், அயலார் தம்மவராகாதிருத்தலைச் சொல்ல வேண்டுமோ?.
தமிழ்க்குழவி உரை:
தமது நெஞ்சமே தம் உறவாக நின்று உதவாத போது அயலார் வந்து துணை நிற்பாரோ?
Translation
A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own!.
Explanation
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
Transliteration
Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya Nenjam Thamaral Vazhi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1300