|
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது.
இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தனியே இருந்து நினைத்தக்கால்-காதலரைப் பிரிந்திருந்து அவர் செய்த கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால் ; என்னைத் தினிய என் நெஞ்சு இருந்தது-என்னைப் பிய்த்துத் தின்பதுபோல் துன்பஞ் செய்தற்கே என்உள்ளம் என்னொடுகூட இருந்தது.
என் நெஞ்சு என்னோடிருந்தது.அவர் செய்த கொடுமைகளை எண்ணி எனக்கு ஆற்றாமைமேலுந் துன்பஞ் செய்தற்கேயன்றி , இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன் றென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம்
என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் மனம் காதலரை மறந்து என்னுடன் தனியே இருந்தபோது என்னைக் கொன்று விடும்போல் இருந்தது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எனது மனமானது இங்கே இருந்துகொண்டு காதலரைப் பிரிந்து அவரது கொடுமைகளைத் தன்னுடன் சேர்ந்து நினைக்கும்போது என்னைத் தின்பது போன்ற துன்பத்தைச் செய்வதாகின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தனித்திருந்து நான் பிரிவுத் துன்பத்தால் அவதியுறும் போது என்னோடு இருக்கும் நெஞ்சமே என்னை அரித்துத் தின்பது போல் துன்பம் செய்கிறது.
|
|
Translation
|
|
My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.
|
|
Explanation
|
|
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
|
|
Transliteration
|
|
Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|