|
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(அவரை மறந்தாற்றல் வேண்டுமென்பது படச் சொல்லியது.) துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா- எம்மைக் கூடாவண்ணம் பிரிந்து போனவரை எம் உள்ளத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன்னிழந்த புறவழகேயன்றி எஞ்சி நின்ற அகவழகும் இழப்பேம். அவர் நம்மைக் கூடாவாறு பிரிந்து போனமையாலும், நாம் அவரை மறக்க முடியாமையாலும், போன மேனியழகேயன்றி நின்ற நிறையும் இழப்பேம். ஆதலால், அவரை மறந்தாற்றுதலே நன்றென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவள் குறிப்பை உணர்ந்த காதலன் அவளைப் பாராட்டுகிறான்.) வாய் பேசாமல் கண் பார்வையினாலேயே தன்னுடைய காம வேதனையைத் தெரியப்படுத்தி அவ்வேதனையைத் தீர்க்கும்படி வணங்கிக் கேட்டுக்கொள்ளுகிற குணமுள்ள பெண்ணி னால்தான் பெண்ணினத்துக்கே பெருமை உண்டாகிறது என்று சொல்லப்படுவது உண்மைதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தமது காம நோயினைக் கண்ணினாற் சொல்லிக் காதலரிடம் இரந்து நிற்கும் தன்மை, இயல்பாகவே பெண் தன்மையுடைய இப்பெண்ணுக்கு மேலும் ஒரு பென்மையுடையது என்பர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கண்களினாலேயே தம் காதல் நோயைச் சொல்லி இரந்து நிற்கும் பாங்கு பெண்மையினால் பெண்ணுக்கே உடைத்தான ஒரு பண்பு.
|
|
Translation
|
|
To show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood's most womanly device, men say.
|
|
Explanation
|
|
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
|
|
Transliteration
|
|
Penninaal Penmai Utaiththenpa Kanninaal
Kaamanoi Solli Iravu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|