|
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) மணியில் திகழ்தரும்நூல்போல்-கோக்கப் பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்து விளங்கித் தோன்றும் நூல்போல ; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இப்பெண்ணின் அழககத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்ற தொரு குறிப்பு முண்டு . அணி கலவியாலான அழகு . அதனகத்துக் கிடத்தலாவது அதனுடன் தோன்றுதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கோத்த மணிவடத்தில் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் நூல் இருப்பது நிச்சயம் என்பது போல இவள் அணிகளால் தெளிவாகத் தெரியக் கிடக்கிற உண்மை ஒன்றுண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கோக்கப்பட்ட பளிங்கு மணிக்குள் கிடந்து வெளியில் புலப்படுகின்ற நூல்போல் இப்பெண்ணின் அழகினுக்குள்ளிருந்து வெளியில் புலப்படுவதொரு குறிப்பு இருக்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கோக்கப்பட்ட மணிகளின் உள்ளே திகழும் நூல் போல எம் காதலியின் அழகில் எம்மை ஈர்க்கும் திறனொன்று இருக்கிறது.
|
|
Translation
|
|
As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue.
|
|
Explanation
|
|
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
|
|
Transliteration
|
|
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|