|
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சிய வழி , அதை யவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும்-நீ சொல்லாது மறைத்தாலும் , ஒல்லாகை இகந்து-அதற்குடம்படாது உன்கட்டை மீறி , நின் உண் கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு-உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செய்தியுள்ளது . இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக. தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை , அவட்கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு . கரத்தல் நாணாலடக்குதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கண்ணைக் கவரும் அழகும் மூங்கிலைப் போன்ற மினுமினுப்புள்ள தோள்களும் உள்ளவளாக இருந்த இவள் இவ்வளவு மங்கியிருக்கிறாளே! இவளுக்குப் பெண்களின் சிறப்பான நிறையுடைமை என்ற குணம் அதிகமாக இருக்கிறது. அதனால் மிக்க வேதனை சகித்திருக்கிறாள் என்று தெரிகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
என்னுடைய கண்கள் நிறைந்த அழகினையும் மூங்கிலையொத்த தோளினையும் உடைய பேதைக்கு பெண்களுக்கு இயல்பாக இருக்கும் மடமைக்குணம் அளவு கடந்து இருக்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கண்நிறைந்த அழகும் மூங்கில் போல் தோளும் கொண்ட என் இனிய காதலிக்கு பெண்மைக்குரிய நாணமே பெருமை தருவது.
|
|
Translation
|
|
The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman's modest sweet reserve.
|
|
Explanation
|
|
Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.
|
|
Transliteration
|
|
Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup
Penniraindha Neermai Peridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|