Thirukural

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது.

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)
மணக்குடவர் உரை:
எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது. இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
எமக்கு இந்நோய் செய்தகண் தாம் இதற்பட்டது-எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஒ ஒ இனிதே-மிகவும் இனிதாவதே. துன்பமென்றது தூங்கா தழுதலை.எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது. எம் துன்பந் தீர்ந்தாற் போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல். 'ஓ ஒ' 'தா அம்' இசைநிறையளபெடைகள். ஏகாரம்தேற்றம்
கலைஞர் உரை:
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!.
சாலமன் பாப்பையா உரை:
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
எனக்கு இவ்வளவு காம வேதனையை உண்டாக்கி வைத்த இந்தக் கண்கள் இப்படித் துன்பத்திற் சிக்கிக்கொண்டு (தூக்கமின்றி, அழுதழுது, நீர் வறண்டு) தவிப்பது நான் மகிழத்தக்கதுதான்; படட்டும், நிரம்பப் படட்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எமக்கு இந்தக் காம நோயினை உண்டாக்கிய கண்கள் தாமும் துயில் கொள்ளாமல் அழுது கொண்டிருக்கின்றன. இது மிகவும் இனிமையாக இருப்பதாயிற்று!
தமிழ்க்குழவி உரை:
அன்று எனக்கு இக்காதல் நோயைத் தந்த கண்கள் இன்று தாம் தூங்கமுடியாமல் துன்பப்படுவது இனிதானதே.
Translation
Oho! how sweet a thing to see! the eye That wrought this pain, in the same gulf doth lie.
Explanation
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.
Transliteration
Oo Inidhe Emakkinnoi Seydhakan Thaaam Itharpat Tadhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1176