|
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங்
குவி' என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின்-தலைநாளில் எதிர்ப்பட்டபோதே பேரன்பு செய்து, நின்னிற் பிரியேன், அஞ்சேல் என்று தேற்றியவர் தாமே பின் மாறாப் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ-அவரிடத்தன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யென்று நம்பியவரிடத்துக் குற்ற முண்டோ? சொன்னதை நிறைவேற்றாமைக் குற்றம் அவரிடத்துத் தங்காவறு செலவழுங்குவி என்பது கருத்து. 'தேறியார், என்பது தன்னைப் பிறர் போற் கூறிய தன்மைப் படர்க்கை. ஒகாரவினா எதிர்மறைக் குறிப்பினது.
|
|
கலைஞர் உரை:
|
|
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) அபயம் கொடுத்து, 'நான் இருக்கிறேன்; நீ அஞ்ச வேண்டாம்' என்று சொன்ன காதலர் இப்போது 'பிரிந்து போகிறேன்' என்றால். அதற்காக அவரை மறுத்துப் பேசத் துணிந்துவிட்டதில் எனக்கென்ன குற்றம்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
'உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சாதே' என்ற தலைவர், தாமே பிரிந்து செல்லுவாராயின் அவர் தெளிவித்த சொல்லை நம்பியவர் மேல் தவறு உண்டோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அஞ்சாதே என்று ஆறுதல் கூறிய காதலர் இன்று பிரிகிறார் என்றால், அவர் கூறிய வார்த்தைகளை உண்மை என்று நம்பியது தவறோ?
|
|
Translation
|
|
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word?.
|
|
Explanation
|
|
If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.
|
|
Transliteration
|
|
Aliththanjal Endravar Neeppin Theliththasol
Theriyaarkku Unto Thavaru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|