|
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்-அயலாரும் பகைவரும் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்துவிடுவோமென்று கருதுதல்; நெய்யால் எரிநுதுப்பேம் என்ற அற்று-நெய்யை வார்த்து நெருப்பை அவிப்போமென்று கருதுவதையொக்கும். வளர்க்குங் கரணம் தளர்க்குங் கரணமாகாது என்பதாம். 'ஆல்' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பரிகாசம் செய்து காமத்தை அடக்கிவிடலாம் என்று நினைப்பது நெய்யை ஊற்றி நெருப்பை அணைத்துவிடலாம் என்று நினைப்பதற்கே சமானம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஊர்மக்கள் எடுக்கின்ற அலரால் காமத்தினை அவித்துவிடுவோம் என்று எண்ணுதல் நெய்யால் எரியை அவித்து விடுவோம் என்று எண்ணுதற்குச் சமமாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நெய் ஊற்றி நெருப்பை அணைக்கமுயல்வது போலத் தான் அலர் பேசி, காதலை அவிக்க நினைத்தல்.
|
|
Translation
|
|
With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love.
|
|
Explanation
|
|
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.
|
|
Transliteration
|
|
Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal
Kaamam Nudhuppem Enal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|