|
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து.
நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு.
எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித்
தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வழக்கைத் தீர்ப்பவன்) ஓரவஞ்சனை யற்றவனாக நடந்து கொண்டால் அந்தப் பெருமை அழியாமலிருந்து அவ னுடைய பரம்பரைக்குப் பாதுகாப்பாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நடுவு நிலைமையுடையவனது செல்வமானது அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாதுகாப்பான உறுதியாதலை உடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நடுவுநிலைமை பிறழாதவரின் செல்வம் மற்றும் உடைமைகள் பின்வரும் வழி முறையினருக்கும் பாதுகாப்பாக அமையும்.
|
|
Translation
|
|
The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.
|
|
Explanation
|
|
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
|
|
Transliteration
|
|
Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|