|
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்-பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று-நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம்.
தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் 'யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 'பகுதியான்' என்பது பகுதிதொறும் என்று பொருள் படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச்
சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும்
தகுதியாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒரு வழக்கைத் தீர்த்துவிட நடுவு நிலைமையாகப் பாராபட்சமில்லாதிருக்க வேண்டிய ஒருவன்) வழக்கினால் கருத்து வேற்றுமைப்பட்டவர்களுடைய நிலையில் தன்னை நிறுத்திக் கொண்டு ஆராய்ந்தால் நடுவுநிலைமை சரியாக இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அயலார், பகைவர், நண்பர் என்ற யாவரிடத்திலும் நடுவுநிலைமை என்ற முறைமை விடாமல் நடந்துகொண்டால், நாடு நிலைமை எனப்பட்ட ஓர் அறமே போதுமான நன்மையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உற்றார் உறவினர் நட்பு பகை அயலார் எனும் பேதம் அற்று நடுவு நிலைமை பேணி ஒழுகுவதாயின், அவ்வாழ்வியல் அறமெனும் தகுதியின்பாற் படும்.
|
|
Translation
|
|
If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.
|
|
Explanation
|
|
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
|
|
Transliteration
|
|
Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|