|
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி. வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
( இதுவுமது ) மதி - வெண்ணிலாவே ! மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் - இப்பெண்ணின் முகம்போலத் தேய்தல் வளர்தலின்றியும் களங்கமின்றியும் என்றும் ஒரு தன்மைத்தாய் விளங்க உனக்கு இயலுமாயின் ; வாழி - நீ நீடு வாழ்வாயாக ! ; காதலை - அன்று நீயும் என் காதலையுடையையா யிருப்பாய். நீ அங்ஙனம் விளங்கமாட்டாயாதலின் , என் வாழ்த்திற்கும் காதற்கும் உரியை யல்லை யென்பதாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
சந்திரனே! நீ பெண்களின் முகத்தைப்போல் பிரகாசிக்க முடியுமானால் நீயும் ஒருவனால் காதலிக்கப்படுவாய். பிறகு நானும் உன்னை வாழ்த்துவேன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மதியே! நீ வாழ்வாயாக! இம்மாதர் முகம் போல் யாம் மகிழும் வகையில் ஒளி வீசவல்லையாயின் நீயும் என்னுடைய காதலினைப் பெறுவாய்!
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நிலவே என் காதலியின் முகத்தைப் போல் முழுமதியாய் நீயும் ஒளிவிடும் வல்லமை உடையாய் ஆயின் நீயும் என் அன்புக்குப் பாத்திரமாவாய்.
|
|
Translation
|
|
Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.
|
|
Explanation
|
|
Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.
|
|
Transliteration
|
|
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|