|
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானை-ஒரு குற்றமுஞ் செய்யாது தன் குடியை யுயரச் செய்தொழுகுவானை; உலகு சுற்றமாச் சுற்றும்-அவன் குடியைச் சேர்ந்தார் அனைவரும், அவனுக்குச் சுற்றமாயிருத்தலை விரும்பித் தாமே சென்று அவனைச் சூழ்வர். குற்றங்கள் அறநயன் (நீதி) முறை (நியாயம்) நடுநிலைகட்கு மாறான செயல்கள். சுற்றம் உறவினராகச் சுற்றியிருக்கும் கூட்டம். உலகு’ வரையறுத்த ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
குற்றமில்லாத வழிகளில் பாடுபட்டுத் தன் குடித்தனத்தின் உயர்வுக்காக முயற்சி செய்து வாழ்கின்றவனை உலகத்தார் உறவாகச் சூழ்ந்து உதவுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குற்றம் யாதும் செய்யாமல் தன் குடியை உயரச் செய்து ஒழுகுவானை உலகத்தார் தாமே சென்று சூழ்ந்து கொள்வார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
குற்றம் இல்லாதவனாய், தன் குடும்பத்தின் மேன்மைக்காக நாளும் உழைப்பவனைத் தன் சுற்றமாகக் கொண்டு பாராட்டும் உலகு.
|
|
Translation
|
|
With blameless life who seeks to build his race's fame,
The world shall circle him, and kindred claim.
|
|
Explanation
|
|
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.
|
|
Transliteration
|
|
Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich
Chutramaach Chutrum Ulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|