|
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர். இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நாண் ஆள்பவர்-நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணால் உயிரைத் துறப்பர் -நாணும் உயிருந் தம்முள் மாறானவிடத்து நாணைக் காத்தற் பொருட்டு உயிர் நீப்பர் ; உயிர் பொருட்டு நாண் துறவார் - உயிரை காத்தற் பொருட்டு நாணினை நீக்கார். 'உயிரினும் நாண் சிறந்த்தென்பது கருத்து. உயிரினும் சிறந்தன்று நாணே.' (தொல், கள 22) இவ்விரு குறளாலும் நாணுடையார் செயல் கூறப்பட்டது. 'ஆல் ' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அது மட்டுமன்று) நாணுடைமை தவறாத சான்றோர்கள் நாணத்துக்காக உயிரை விடுவார்களே யல்லாமல் உயிரைப் பெரிதாக எண்ணி நாணத்தை விட்டுவிட மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நாணத்தினது சிறப்பினை அறிந்து அதன்வழி நிற்பவர்கள் அந்த நாணமும் உயிரும் தம்முள் மாறுபட்ட போது நாணத்தினைக் காக்க உயிரை விடுவார்களே தவிர, உயிரைக் காப்பாற்ற நாணத்தினை விட்டுவிட மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சான்றோர்கள் நாண் என்னும் நற்பண்பைக் காத்தலின் பொருட்டு உயிரையும் துறப்பர். ஆனால் உயிர்வாழ வேண்டுமென்பதற்காக நாணத்தைத் துறவார்.
|
|
Translation
|
|
The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake.
|
|
Explanation
|
|
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
|
|
Transliteration
|
|
Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal
Naandhuravaar Naanaal Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|