Thirukural

40. கல்வி

391

கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.

392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.

394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.

395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.

396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.

397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.

398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.

399

தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.

400

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.