Thirukural

36. மெய்யுணர்தல்

351

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு.

352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு

353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து.

354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

355

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.

356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.

357

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்பது அறிவு.

359

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்.

360

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்நாமம் கெடக்கெடும் நோய்.