Thirukural

28. கூடாவொழுக்கம்

271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்.

272

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.

273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

274

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுஏதம் பலவுந் தரும்.

276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல்.

277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து.

278

மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்.

279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல்.

280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின்.