|
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குடிப்பிறந்தார்- நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்முன்றும் இழுக்கார்- ஒழுக்கம் மெய்ம்மை பழிநாணல் ஆகிய முத்திறத்தும் ஒருபோதும் தவறார். ஒழுக்கம் முதலிய முன்றும், முறையே, மெய் மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும்) நல்ல குடியிற் பிறந்தவர்கள் நல்ல நடத்தை, சத்தியம், பழிக்கு அஞ்சுதல் ஆகிய மூன்றிலும் தவறமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் ஆகிய இம்மூன்றினிடத்தும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் தாமாகவே வழுவ மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நல்லொழுக்கம், உண்மை, பழிகண்டஞ்சும் பண்பு, இவை மூன்றும் நற்குடிப்பிறந்தவர்கள் வாழ்வில் தவற விடுவதில்லை
|
|
Translation
|
|
In these three things the men of noble birth fail not:
In virtuous deed and truthful word, and chastened thought.
|
|
Explanation
|
|
The high-born will never deviate from these three; good manners, truthfulness and modestyThe high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
|
|
Transliteration
|
|
Ozhukkamum Vaaimaiyum Naanum Im Moondrum
Izhukkaar Kutippiran Thaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|