|
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை.(அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பல சிறுமை செய்து சீர் அழிக்கும் சூதின் - பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் செய்து, உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட்டத்தைப்போல; வறுமை தருவது ஒன்றுஇல் - கொடிய வறுமையைத் தரக்கூடியது வேறொன்றுமில்லை. நளன்போல் மக்களைவிட்டுப் பிரிவதும்,காதல் மனைவியைக் காட்டில் விட்டு நீங்குவதும் ; பாண்டவர் போல் மனைவியையும் பணையமாக வைத்திழப்பதும்; பகைவர் அவள் கூந்தலைப்பிடித்து அம்பலத்திற்கு இழுத்து வந்து மானக்கேடாய்ப் பேசி துகிலுரியப் பார்த்திருப்பதும், வென்றவர்க்கு அடிமையராகி மேலாடையைக் களைவதும், பல்வகைச் சிறுமைகளாம். சூது ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்றாதலாலும், அதையாடுவோர் தீயோரொடு சேர்த்து எண்ணப்படுவதாலும், தோற்றவர் நாட்டையும் செல்வத்தையும் இழத்தலாலும், 'சீரழிக்கும்' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பணத்துக்கு வழியே இல்லாமல் ஓய்ந்துவிட்ட பிறகும் சூதாட்டம் சும்மா இருக்கவிடாது.) பல குற்றங்களுக்கு ஆளாக்கி வாழ்க்கையைச் சீரழித்து விடும். அந்தச் சூதாட்டத்தை விட மனிதனுக்குத் தரித்திரத்தை உண்டாக்குவது வேறில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்குத் துன்பங்கள் பலவற்றையும் கொடுத்துப்புகழையும் கெடுக்கின்ற சூதினைப் போல வறுமையினைக்கொடுக்கவல்லது பிறிதொன்றும் இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அவமானமுற வைத்து அல்லல்படுத்திச் சீரழிக்கும் சூதாட்டம் போல ஒருவனை வறுமைக்கு ஆட்படுத்துவது வேறொன்றும் இல்லை.
|
|
Translation
|
|
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.
|
|
Explanation
|
|
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
|
|
Transliteration
|
|
Sirumai Palaseydhu Seerazhikkum Soodhin
Varumai Tharuvadhondru Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|