|
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கள் உண்ணப் போழ்தில் - கள்ளுண்பா னொருவன் தான் அதை உண்ணாது தெளிந்திருக்கும் வேளையில்; களித்தானைக் காணுங்கால் - கள்ளுண்டு வெறித்த பிறனைக்காணும்போது; உண்டதன் சோர்வு உள்ளான் கொல்- தான் உண்டபொழுது தனக்கிருந்த மயக்கத்தையும் உவமையளவையாலறிந்து, அதுவும் இத்தகையதே யென்று கருதான் போலும். கள்ளுண்டு வெறித்த நிலையின் இழிவை, உவமையளவையாலும் அறிந்தபின்னும் திருந்தாத கட்குடியன் நிலைமை நோக்கி, ஆசிரியர் வருத்திக் கூறியவாறு. 'கொல்' ஐயம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கள்ளுண்ணும் பழக்கமுள்ளவர்கள், கள்ளை உண்ணா திருக்கிற சமயத்தில் கள்ளுண்டு போதையினால் தள்ளாடுகிற வேறொரு வனைப் பார்க்கிற போதாவது கள்ளுண்பதனால் உண்டாகும் தடுமாற் றத்தை எண்ணிப் பார்க்க மாட்டானா! (அப்போது மன மாறுதல் ஏற்பட்டால்தான் உண்டு.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கள்ளுண்பான் ஒருவன் தான் உண்ணாதிருந்த போது கள்ளுண்டு களிப்பவன் நிலைமையினைக் கண்டு, தான் உண்டபோதும், 'இப்படித்தான் இருந்திருப்பான்" என்று கருத மாட்டான் போலும்!
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் மதுவருந்தாத போது, மதுவருந்திய ஒருவன் தன்நிலை பிறழ்ந்து கிடப்பதைக்காணின், தானும் இந்நிலைக்கு ஆளாவோமே என்று எண்ணுவானா?
|
|
Translation
|
|
When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?.
|
|
Explanation
|
|
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.
|
|
Transliteration
|
|
Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal
Ullaankol Untadhan Sorvu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|