|
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)'
|
|
மணக்குடவர் உரை:
|
|
கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கள்ளை உண்ணற்க - உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் கள்ளை உண்ணாதிருக்க; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அங்ஙனமன்றி உண்ணவே விரும்பின், அறிவுடையோரால் மக்களாகக் கருதப்படுதலை விரும்பாதவர் உண்க. ஆறறிவிற்குரிய மக்கட்பிறப்பையும் அதனாற் பெறக்கூடிய கல்வியறிவையும் பெற்றும், கட்குடியால் அவற்றை யிழந்துவிடுதலால், இயற்கையாகவே அவையில்லாத அஃறிணையினுங் கீழாகிப் பொதுவான உயிரினத்திலும் சேர்க்கப்படார் என்னுங் கருத்துத் தோன்ற , 'எண்ணப்பட வேண்டாதார்' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) கள்ளைக் குடிக்க வேண்டா. அறிவொழுக் கங்களாற் சிறந்த மேன்மக்களால் மதிக்கப்படுவதை வேண்டாதவர்கள் குடித்தால் குடிக்கட்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறிவுடையவர்கள் கள்ளினை உண்ணா திருக்கக் கடவர், நல்லவர்களால் மதிக்கப்பட விரும்பாத வர்கள் உண்ணுவார்களாக, என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உண்ணாதீர் மதுவை, சான்றோரால் மதிக்கப்படாத ஓர் இழிநிலை அடைய வேண்டுமெனில் மட்டுமே உண்பீராக.
|
|
Translation
|
|
Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.
|
|
Explanation
|
|
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
|
|
Transliteration
|
|
Unnarka Kallai Unilunka Saandroraan
Ennap Pataventaa Thaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|