|
அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார். (ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தம்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்: வனப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தம் நலம் பாரிப்பார்-கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை உலகத்திற் பரவச் செய்யும் உயர்ந்தோர்; தகை செருக்கிப் புல் நலம் பாரிப்பார் தோள் தோயார்-ஆடல்,பாடல்,ஒப்பனை முதலியவற்றால் தம் திறத்தை மிகுத்துத் தம்மால் ஆடவர் பெறும் இன்பத்தைப் பொருள் கொடுப்பாரிடத் தெல்லாம் பரப்பும் விலைமகளிரின் தோளைத் தீண்டார். தகை அழகு.தோயின் புகழ்கெடுமாதலின் 'தோயார்' என்றார். 'தந்நலம்' என்பதில் 'நலம்' ஆகுபொருளது. இம்மூன்று குறளாலும் உயர்ந்தோர் விலைமகளிரைத் தீண்டாமை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அறிவில் சிறந்தவர்களாக இல்லாதவர்களாயினும்) தம்முடைய உடல் நல ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுகிறவர்கள் அழகைக் காட்டி மயக்கி அற்பசுகத்தை விலைக்கு விற்கக் கடை பரப்புகின்ற விலை மாதருடைய தோள்களைத் தழுவமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஆடல், பாடல், அழகு முதலியவைகளினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தினை விலை கொடுப் பார்க்கு அளிக்கும் மகளிர் தோளினைத் தம் புகழினை உலகில் பரப்பும் உயர்ந்தோர் தீண்டமாட்டார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன் அழகால், கற்ற கலையால், செருக்குற்று விலைமகளிராய் வாழ்பவர்தம் தோள்களை நல்லொழுக்கம் பேணும் பண்பாளர் சேர்வதில்லை.
|
|
Translation
|
|
From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away.
|
|
Explanation
|
|
Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).
|
|
Transliteration
|
|
Thannalam Paarippaar Thoyaar Thakaiserukkip
Punnalam Paarippaar Thol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|