|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
|
|
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்.
இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்-முக மலர்ந்து நல்ல விருந்தினரைப பேணுவானது இல்லத்தின்கண்; செய்யாள் அகன் அமர்ந்து உறையும்-திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.
திருமகள் மனமகிழ்தல் செல்வம் நல்வழியிற் செலவிடப்படுதல் பற்றி. வதிதல்-நிலையாகத் தங்குதல் நல் விருந்தினர்-அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர்.
|
|
கலைஞர் உரை:
|
|
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர்
வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்டவனுடைய வீட்டில் எது இல்லாவிட்டாலும் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்). முகமலர்ச்சியோடு தகுதியுடைய விருந்தினர்களை உபசரிக்கிறவனுடைய வீட்டில் மனமகிழ்ச்சியோடு திருமகள் வாசம் செய்வாள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முகமலர்ச்சியுடன் தக்க விருந்தினரைப் போற்றுபவனுடைய இல்லத்தில் திருமகள் மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பாள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
முகம்மலர்ந்து விருந்தினரைப் பேணி மகிழ்வார் இல்லத்தில் மனநிறைவோடு செல்வத் திருமகள் வாசம் செய்வாள்.
|
|
Translation
|
|
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.
|
|
Explanation
|
|
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
|
|
Transliteration
|
|
Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu
Nalvirundhu Ompuvaan Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|