Thirukural

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
தேவநேயப் பாவாணர் உரை:
வைகலும் வருவிருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையால் துன்புற்றுக்கெடுதல் இல்லை. இது நாட்டு வளத்தையும் இல்லறத்தானின் செல்வநிலையையும் பொறுத்தது.
கலைஞர் உரை:
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(விருந்தாளியை உபசரிப்பதால் யாரும் கெட்டுப் போக மாட்டார்கள்.) தினந்தினம் வருகிற விருந்தினர்களுக்கெல்லாம் உணவளித்து உபசரிக்கின்றவனுடைய வாழ்க்கை அதனால் வறுமையுற்றுக் கெட்டுப் போகுமென்பது இல்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றுபவனுடைய இல்வாழ்க்கையானது வறுமையால் துன்புற்றுக் கெடுவது இல்லையாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒவ்வொருநாளும் வருகின்ற விருந்தினரை உபசரித்து வாழ்பவர் தம் வாழ்க்கை எந்த சூழலிலும் துன்புற்று பாழ்படுவதில்லை.
Translation
Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share.
Explanation
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
Transliteration
Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai Paruvandhu Paazhpatudhal Indru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 83