|
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை',(சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.
|
|
மணக்குடவர் உரை:
|
|
என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிலை மக்கள் சால உடைத்து எனினும்-போரிற் பின்வாங்காது நிலைத்து நிற்கும் மறவரை மிகுதியாகக் கொண்டிருப்பினும்; தலைமக்கள் இல்வழித்தானை இல்-தனக்குத் தலைவராகியவயவர் (வீரர்) இல்லாவிடத்துப் படை நிற்காது. படையைப் பயிற்றவும் போருக்கு நடத்திச் செல்லவும் போர்க்களத்தில் ஏவிப் போர் செய்விக்கவும், தலைவர் இன்றியமையாமையால், 'தலைமக்க ளில்வழி யில்' என்றார். இதனால், படைத்தலைவரின் தனிச்சிறப்புக் கூறப்பட்டது. தலைவனில்லாப்படை தலையில்லாவுடம்பு போன்ற தென்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒரு வீரன் போர் தொடுக்கு முன் எதிரிக்கு இவ்விதம் எச்சரிக்கை செய்வான்) பகைவர்களே! என்னுடைய அரசனை எதிர்த்து நிற்க வேண்டாம் என்னுடைய அரசனை எதிர்த்து இறந்து போய் கல் நாட்டப் பெற்றவர்கள் பலர்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவர்களே! எனது தலைவனை எதிர்த்து நின்று இறந்து கல்லாய் நின்ற வீரர் பலராவர். ஆதலால் எனது தலைவன் முன்பாகப் போர் செய்து நிற்பதை நீக்குவீராக.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என் தலைவன் முன்நின்று போரிட்டு மாண்டு நடுகல்லாய் ஆனவர் பலர், எனவே பகைவர்காள், போரிடும் பொருட்டு என் தலைவன் முன் நில்லாதீர்கள்.
|
|
Translation
|
|
Ye foes! stand not before my lord! for many a one
Who did my lord withstand, now stands in stone!.
|
|
Explanation
|
|
O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.
|
|
Transliteration
|
|
Ennaimun Nillanmin Thevvir Palarennai
Munnindru Kalnin Ravar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|