Thirukural

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் - தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்: படைவெல்லும் - படை பகையை வெல்லும். (விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வௌவல் , இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும்.
தேவநேயப் பாவாணர் உரை:
தானை-படை; அடல்தகையும் ஆற்றலும் இல் எனினும்-பகைவர்மேற் சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கில்லாவிடினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப்பொலிவாலும் வடிவு வகுப்புச் சிறப்பாலும் பெருமை பெறும். இல்லெனினும் என்னும் இழிவுசிறப் பும்மை அவற்றின் இன்றியமையாமையைக் காட்டிற்று. தோற்றப் பொலிவானது. சுவடிக்கப்பட்ட தேர்களும் படாம்போர்த்த யானைகளும் அணி பூட்டிய குதிரைகளும், குடை கொடி பதாகை முதலிய கண்கவர் எடுபிடிகளும், பல்லியமும் காள வகைகளும் செய்யும் ஓசை முழக்கமும், கூடிய ஆரவாரம். படை வகுப்பு, மேற் கூறப்பட்டது. பாடு பார்த்தவுடன் பகைவர் அஞ்சும் பெருமை. தென்னாலியிராமனின் 'எட்சண் டெருமைத்தோல்' (திலகாஷ்ட மகிஷபந்தனம்) கண்டோடிய வடநாட்டுப் புலவன்போல், வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திலிருப்பதால், படைத்தகையாலும் பகைவரை மரூட்டலாம் என்றார். பதாகை-பெருங்கொடி
கலைஞர் உரை:
சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
படை வீரர்களுக்குத் தகாத அற்பத் தனங்களும், (ஏதாவது குறையை நீக்காததால் அரசன்மீது கொண்டுள்ள) நீங்காத மனவருத்தமும்,(ஊதியம், உணவு, உடை, தளவாடங்கள் முதலியவை குறைவான) தரித்திரமும் இல்லாதபடி பார்த்துக் கொண்டால் சேனை வெற்றி தரும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
குறைந்து சிறிதாகிக்கொண்டு போவதும்.. வெறுப்புணர்ச்சியும் வறுமையும் ஆகியவை இல்லாமலிருந் தால் அச்சேனையானது பகைவரை வெல்லும்.
தமிழ்க்குழவி உரை:
கீழ்மைப்பண்பும், நீங்காத்துயரும், வறுமையும் இல்லாமல் படை உறுதியுடன் இருப்பின் வெற்றி நிச்சயமாகும்.
Translation
Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory.
Explanation
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
Transliteration
Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum Illaayin Vellum Patai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 769