|
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என்-மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன தொடர்புண்டு?; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலொடு என்-அதுபோல, நுண்ணறிஞரவைக்கு அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்புண்டு? "எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே." என்று தொல்காப்பியமும் (சொல். கிளவி. 61). "ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே." என்று நன்னூலும் (பொது. 7) கூறியவாறு, வாள் என்பது வில்வேல் முதலிய பிற படைக்கலங்களையுந் தழுவும். 'என்' என்னும் வினா ஈரிடத்தும் எதிர்மறை விடையை அவாவி நின்றது. நுண்ணிய அறிஞர் கூட்டம் நுண்ணவை. இதில் வந்துள்ளது எடுத்துக் காட்டுவமை. "அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும்-நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று." என்பது நீதிநெறி விளக்கம் (6)
|
|
கலைஞர் உரை:
|
|
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிச் சபையில் அச்சமில்லாமல் விவாதிக்க முடியாதவர்கள் எவ்வளவு நூல்களைப் படித்திருந்தாலும் என்ன பயன்?) தைரியமில்லாதவர்கள் வாளெடுத்து என்ன பயன்? அதைப்போல் கற்றவர் சபையில் அஞ்சாமல் பேச முடியாதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும் என்ன பயன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வன்கண்மை இல்லாதவர்களுக்கு வாளுடன் என்ன தொடர்பு உண்டு? அது போல, நுட்பமுள்ளவர்கள் நிறைந்த சபையைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு கற்ற நூலோடு என்ன தொடர்பு உண்டு?
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
போர்த்திறம் இல்லாதவர்க்கு, வாளால் என்ன பயன்? அதுபோலத் தான் அறிவார் அவைகண்டு அஞ்சுபடம்களுக்கு அவர்கள் கற்ற நூலால் என்ன பயன்?
|
|
Translation
|
|
To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?.
|
|
Explanation
|
|
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.
|
|
Transliteration
|
|
Vaaloten Vankannar Allaarkku Nooloten
Nunnavai Anju Pavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|