|
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து -வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய வல்ல அறிஞரவைக்கண் உரை நிகழ்த்தின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் -பலநூல்களையுங் கற்று அவற்றின் பொருளை அறிந்தவரின் கல்வி விளங்கித்தோன்றும். சொல் என்றது சொற்பொழிவை. உரை நிகழ்த்தின் என்பது அவாய் நிலையால் வந்தது. "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால்."
|
|
கலைஞர் உரை:
|
|
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கற்றார் சபையில் பேசும் பழக்கம் பேச்சுத் திறனை அதிகப்படுத்தும்.) பிரசங்கம் செய்கிறவர்கள் குற்றமில்லாமல் பேசுகின்றார்களா என்பதை அறியக்கூடியவர்கள் நிறைந்த சபையில் பேசினால்தான் கற்றறிந்த கல்வியின் சிறப்பு அதிகப்பட்டுப் பிரகாசமடையும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர்கள் உள்ள அவைக் கண் சொன்னால் பல நூல் களையும் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
குற்றமில்லாத கல்வியுடைய அறிஞர் அவையில், கற்ற ஒருவருடைய உரையானது மேலும் விளக்கம் பெறும்
|
|
Translation
|
|
The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.
|
|
Explanation
|
|
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.
|
|
Transliteration
|
|
Katrarindhaar Kalvi Vilangum Kasatarach
Choldheridhal Vallaar Akaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|