|
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின். இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்- அரசரின் பார்வை வேறுபாடுகளை அறியவல்ல அமைச்சரைப் பெற்றால்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-அவ்வரசர்க்குப் பிறரோடுள்ள பகைமையையும் நட்பையும் அவர் கண்களே தெரிவிக்கும். பார்வை வேறுபாடுகள் எண்சுவையோடு சமந்தமும்(சாந்தமும்)சேர்ந்த தொண்சுவை(நவரசம்) பற்றியன; பகைமை பற்றிய சின நோக்கு கண் சிவப்பாலும், நட்புப்பற்றிய மகிழ்நோக்கு கட் பொலிவாலும், அறியப்படும். 'கண்' இரண்டுட் பின்னது ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மனிதனுக்குக் கண்களால் அடையும் பயன் வெறும் பார்ப்பது மட்டுமல்ல. பார்த்த பொருள்களின் தன்மைகளையும் ஆராய்ந்து அறிவிக்கக்கூடியது கண். அதனால்) கண்களின் இயல்பையும் அவற்றாலடையும் பயன்களின் வகைகளையும் அறிந்தவர்களுக்குப் பகைவனையும் நண்பனையும் அவர்களுடைய கண்களே அவர்களுக்குச் சொல்லிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பார்வையினால் அறிய வல்ல ஆற்றல் படைத்தவரை அரசன் பெற்றிருந்தால், கிடந்த பகைமை யினையும் நட்பினையும் வேற்று வேந்தர் சொல்லா விட்டாலும் அவர்கள் கண்களே சொல்லும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கண்பார்வையின் வகைமைகளின் திறன் அறிவோர். ஒருவரின் பகைமை மற்றும் நட்பு உணர்வுகளைச் கண்களைப் பார்த்தே எளிதில் புரிந்து கொள்வார்.
|
|
Translation
|
|
The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye's swift varying moods to scan.
|
|
Explanation
|
|
If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.
|
|
Transliteration
|
|
Pakaimaiyum Kenmaiyum Kannuraikkum Kannin
Vakaimai Unarvaarp Perin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|