Thirukural

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்.

அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.)
மணக்குடவர் உரை:
யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தௌ¤வுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
துளக்கு அற்ற காட்சியவர்-நிலைத்த உறுதியான அறிவினையுடையார்;கொளப்பட்டோம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார்-யாம் அரசனால் மதிப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டேம் என்று கருதித் தம் நிலைமையொடு பொருந்தாதவற்றைச் செய்யார். நிலைமை யுயர்ந்தபின் தம் பழைய நிலைமையை நினைத்து முன் போன்றே தாழ்மையாய் ஒழுகாது, "நன்னிக்குப் பதவி வந்தால் நள்ளிரவிற் குடைபிடிப்பான்." என்பதற் கிணங்கத் தலைகால் தெரியாது நடப்பவரே உலகத்துப் பலராதலின், என்றும் ஒரு தன்மையராக விருந்து மன்னர் விழைப விழையாது அவரிடத்து நின்ற வொளியோ டொழுகுபவரைத் 'துளக்கற்ற காட்சியர்' என்றார். காட்சி என்றது அகக்காட்சியை.
கலைஞர் உரை:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அரசன் தம்முடன் எவ்வளவு சகசமாகப் பழகினாலும்) தெளிந்த அறிவுடையவர்கள், 'நாம் அரசனுக்கு மிகவும் பிரிய என்று எண்ணிக்கொண்டு முள்ளவர்கள் ஆகிவிட்டோம் தகாதமுறையில் அரசனிடம் நடந்து கொள்ளமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நிலைபெற்ற அறிவினையுடையவர்கள், அரசனால் 'நாம் நன்கு மதிக்கப்பட்டுள்ளோம்' என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
தாம் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் எனக் கருதி தகாத செயல்களை தெளிந்த அறிவினர் செய்வது இல்லை.
Translation
'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view.
Explanation
Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".
Transliteration
Kolappattem Endrennik Kollaadha Seyyaar Thulakkatra Kaatchi Yavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 699