|
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்ப¬£ம அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான். அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மன்னர் விழைப விழையாமை - தம்மால் அடுக்கப் பட்ட அரசர் தம் பதவிக்கேற்பச் சிறப்பாக விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அவ்வரசர் வாயிலாகவே அமைச்சர் முதலியோரான தமக்கு நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். "மன்னர் விழைப' என்றது,உண்டி,ஆடையணி,உறையுள்,ஊர்தி, பெண்ணின்பம் முதலியவற்றுட் சிறந்த வகைகளையும்; கண்ணியம், புகழ் முதலியவற்றில் ஒப்புயர்வின்மையும்; அரசனுக் கென்றே ஒதுக்கப் பெற்ற ஆடிடம், நீர்நிலை முதலியவற்றையும். அரசனுக்கு ஒப்பாதல் அஞ்சி இவற்றை விரும்பாதொழியவே, அரசனே அவ் வச்சத்திற்கு மகிழ்ந்து பலவகைச் செல்வத்தையும் நிலையாக நுகரத்தருவான் என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அரசனோடு இருக்கும் ஒருவன்) அரசன் ஆசைப்படுகிற பொருள்களிலெல்லாம் தானும் ஆசைப்படாமலிருப்பது அரசனால் பாராட்டப்படும். அதனால் பல நன்மைகள் உண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம் மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல் வேண்டும். அவ்வாறிருத்தல் -அமைச்சர்க்கு மன்னராலே நிலைபெற்ற செல்வத்தினைக் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மன்னரோடு பழகும் வாய்ப்பில் இருப்பவர்கள் மன்னர் விரும்பும் பொருள்மேல் தானும் விருப்பம் கொள்ளாதவராய் இருப்பின் அப்புண்பு அவருக்குச் சிறப்பைத்தரும்.
|
|
Translation
|
|
To those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies.
|
|
Explanation
|
|
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.
|
|
Transliteration
|
|
Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal
Manniya Aakkan Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|