|
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
67
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்யவேண்டிய நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றோரவையின்கண் முதன்மையாயிருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமானாக்குதல்.
மகனைச் செல்வனாக்குவதிலுங் கல்விமானாக்குவது சிறந்தது என்பது கருத்து. 'சான்றோ னாக்குதல தந்தைக்குக் கடனே '. என்றார் பொன்முடியாரும். ( புறம். 312)
|
|
கலைஞர் உரை:
|
|
தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குழந்தைகளை வளர்ப்பதில்) தகப்பன் மகனுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியம் என்னவென்றால், தன் மகன் கற்றவர் சபையில் முதல் வரிசையில் சிறப்புடையவனாக விளங்கும்படி (கல்வி கேள்வி அறிவுடையவனாகச்) செய்து வைக்க வேண்டும் என்பது தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை யாதென்றால் கற்றவர் நிறைந்த அவையில் அவரினும் சிறப்புற்று முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றவேண்டிய முக்கிய கடமை யாது? சான்றோர் அவையில் முன்னிலைப்படுத்துவதே ஆகும்.
|
|
Translation
|
|
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.
|
|
Explanation
|
|
WThe benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.
|
|
Transliteration
|
|
Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|