|
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கலங்காது கண்ட வினைக்கண்-தெளிவாக எண்ணித்துணிந்த வினை முயற்சியில்; துளங்காது தூக்கம் கடிந்து செயல்-பின்பு மன அசைவில்லாதும் காலந்தாழ்க்காதும் விரைந்து ஊக்கமாகச் செய்க. தப்பாது பயன் படுமென்றும் வெற்றியாக முடியுமென்றும் தெளிவாக ஆராய்ந்தறிந்த வினையைக் 'கலங்காது கண்ட வினை' யென்றும், மனத்தளர்ச்சியும் உடற்சோம்பலும் வினையைக் கெடுக்கு மாதலின் 'துளங்காது தூக்கங் கடிந்து செயல்' என்றும், கூறினார்.
|
|
கலைஞர் உரை:
|
|
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவர்களைப் பின்பற்றி) நல்ல காரியம் என்று தெளிவாகத் தெரிந்து மேற்கொண்டுவிட்ட காரியத்தைப் பூர்த்தி செய்யும் மன உறுதியுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனம் தெளிந்து செய்வதற்குத் துணிந்த. தொழிலினிடத்து அசைதலின்றி நீட்டித்துவிடாமல் செய்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கலங்காமல் தெளிந்து ஒரு பணியைத் தெரிவு செய்த பிறகு சோர்வுறாமல் காலம் தாழ்த்துவதைத் தவிர்த்து உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும்.
|
|
Translation
|
|
What clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil.
|
|
Explanation
|
|
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.
|
|
Transliteration
|
|
Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu
Thookkang Katindhu Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|