Thirukural

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.

செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வீறு எய்திமாண்டார் வினைத்திட்பம்-சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட அமைச்சரின் வினைத்திண்மை;வேந்தன் கண் ஊறு எய்தி உள்ளப்படும்-பயனளவில் அரசனையடைதலால் அவனாலும் பிறராலும் மதிப்பொடு கருதப்பெறும். பிறவிலக்கணங்கள் கச-ஆம் அதிகாரத்தில் முதல் ஆறு குறள்களிலுஞ் சொல்லப்பட்டனவாம். 'வேந்தன்க ணூறெய்தல்' - வினைத்திட்பத்தால் விளைந்த செல்வமும் புகழும் அரசனை யடைதல். ஊறெய்தல்-உறுதல். உறுவது ஊறு. உறுதல்-அடைதல்.
கலைஞர் உரை:
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(வினைத்திட்பம் என்ற பெருங்குணத்தின் உச்சத்தை யாரிடத்தில் காணலாம், என்றால்) கொண்ட கொள்கைக்காக ஓர் அரசனையும் எதிர்த்து, அவனால் பல துன்பங்களையும் அடைந்து அவற்றைச் சகித்துக்கொண்டு தம் கொள்கையில் வெற்றி பெற்றுக் கீர்த்தியடைந்தவர்களுடைய மன உறுதி போற்றத் தகுந்தது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எண்ணத்தில் சிறப்புடைந்து மாட்சிமைப்பட்ட அமைச்சரது தொழில் வலிமையானது. வேந்தனிடத்தில் செல்வத்தினையும் புகழினையும் உண்டாக்குவதால் எல்லோராலும் நன்கு மதிக்கப்படும்.
தமிழ்க்குழவி உரை:
விடாமுயற்சியுடன் செயல்களைச் செய்து வெற்றி பெற்ற ஒருவரின் வினையாண்மை மன்னவன் மனதிலும் பதிய பாராட்டப் படுவான்.
Translation
The power in act of men renowned and great, With king acceptance finds and fame through all the state.
Explanation
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
Transliteration
Veereydhi Maantaar Vinaiththitpam Vendhankan Ooreydhi Ullap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 665