|
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தெரிதலும் -ஒரு வினையைச் செய்யும் வகைபலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந்ததை அல்லது முழுவாய்ப்பாகவுள்ளதை ஆராய்ந்து அறிதலும்; தேர்ந்து செயலும் -அங்ஙனம் அறிந்தபடி செய்யுங்கால் வெற்றிக் கேதுவான வழிகளைக் கையாளுதலும்; ஒருதலையாச் சொல்லலும் - சிலரைப் பிரித்தல் பேணுதல் பொருத்தல் பற்றி இன்னதே செய்யத்தக்க தென்று திட்டவட்டமாகச் சொல்லுதலும்; வல்லது அமைச்சு -வல்லவனே அமைச்சனாவான். ஐயுறவாகவும் கவர்படவும் சொல்லின் வெற்றியின்மையொடு கேடாகவும் முடியுமாதலின், 'ஒருதலையா' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும்) செய்யவேண்டிய காரியத்தை அறிந்தவர்களாகவும், தெரியாதவற்றை ஆராய்ந்து தெரிந்துகொண்டு செய்கிறவர்களாகவும் நிச்சயமான ஒரே யோசனையைச் சொல்லும் திறமையுடையவர் களாகவும் அமைந்தவர்களே மந்திரிகளாக இருக்கத் தகுந்தவர்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செய்தொழிலில் ஆவன ஆராய்ந்து தெரிதலும், செய்யும் பொது வாய்க்கும் திறத்தினை நாடிச் செய்தலும், திட்டமிட்டுச் செய்ய வேண்டியவற்றை முடிவாகச் சொல்லலும் ஆகிய இவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நடப்புகளைத் தெரிந்து கொள்ளலும், தெரிந்தவற்றைத்தேர்ந்து தெளிந்து செயல்படுத்துதலும், அவற்றைஉறுதிபட எடுத்துரைத்தலும் அமைச்சர்க்குப் பெருமை.
|
|
Translation
|
|
A minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word.
|
|
Explanation
|
|
The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).
|
|
Transliteration
|
|
Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach
Chollalum Valladhu Amaichchu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|