|
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு.
இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு -சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு - குடிமடிந்து குற்றம் பெருகும். - குடியுங் கெட்டுக் குற்றமும் பெருகும்
'உஞற்று' என்னும் சொல்வரலாறு 592-ஆம் குறளுரையிற் கூறப்பட்டது. குற்றம் மேற் கூறப்படும்.
|
|
கலைஞர் உரை:
|
|
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்;
குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எப்படியென்றால்) சோம்பலில் ஒடுங்கிக் குடும்பத்துக்குப் பெருமையுண்டாக்கும் காரியங்களைச் செய்யாமலிருப்பவர்களுடைய குடும்பத்தின் பெருமை கெட்டுப்போவது மட்டுமல்ல; அவர்கள் குற்றமான பல காரியங்களையும் செய்யத் தலைப்படுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சோம்பலிலேயே வீழ்ந்தமிழிந்து சிறந்த முயற்சி இல்லாதவர்களுக்குத் தனது குடியும் அழிந்து குற்றமும் பெருகிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சோம்பல் பெருக, முயற்சி ஏதும் இன்றி வாழும் ஒருவருடைய குடிப்பெருமை விரைந்து அழிய குற்றங்களும் மிகையாகும்.
|
|
Translation
|
|
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.
|
|
Explanation
|
|
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
|
|
Transliteration
|
|
Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|