Thirukural

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து.

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும். சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி -அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் அறிவிலி பிறந்தகுடி; தன்னினும் முந்து மடியும் -அவனினும் முற்பட அழிந்து போம். அழிவு தருவதை உடன்கொண்டொழுகலாற் ' பேதை ' என்றும் ,அவனாற் காக்கப்படாமையால் அவனினும் முந்துற வழியும் என்றும் ,கூறினார். முந்துற வழிதலாவது அவனொடு தொடர்பின்றி மறைதல்.
கலைஞர் உரை:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
சாலமன் பாப்பையா உரை:
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏனெனில்) சோம்பேறித்தனம் மிகுந்துள்ள மூடன் பிறந்த குடித்தனம். அவனால் அவன் மடிவதற்கு முன்னால் குடி முழுகிப் போய் விடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
விடவேண்டிய சோம்பலினைத் தன்னுள்ளே வைத்து நடக்கின்ற அறிவில்லாதவன் பிறந்துள்ள குடியானது, அவனுடைய காலம் முடிவதற்குள் அழிந்துவிடும்.
தமிழ்க்குழவி உரை:
மடியை (சோம்பலை)த் தன் மடிமீது வைத்துக் கொண்டு ஒழுகும் அறிவில்லா ஒருவன் பிறந்த குடும்ப மானது அவனுக்கு முன்னதாகவே மடிந்து (அழிந்து) விடும்.
Translation
Who fosters indolence within his breast, the silly elf! The house from which he springs shall perish ere himself.
Explanation
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
Transliteration
Matimatik Kontozhukum Pedhai Pirandha Kutimatiyum Thanninum Mundhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 603