|
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உடையர் எனப்படுவது ஊக்கம் -ஒருவரைச் செல்வமுடையார் என்று சொல்லக் கரணியமாயிருப்பது முயற்சியுள்ளம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ - அம்முயற்சியுள்ளம் இல்லாதார் வேறேதேனும் உடையராயினும் உடையராவரோ ? ஆகார்.
வேறுடையது என்றது முதுசொம் எனப்படும் முன்னோர் தேட்டை . காக்கும் ஆற்றலின்மையால் அதையும் இழப்பர் என்பதாம் . எச்சவும்மை தொக்கது
|
|
கலைஞர் உரை:
|
|
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு
எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஊக்கம் உடையவர்கள் தாம், ஒன்று உடையவர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். ஊக்கம் இல்லாதவர்கள் மற்ற எதை உடையவர்களாக இருந்தாலும் உடையவர்கள் ஆவார்களா? மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவரை 'உடையவர்' என்று சொல்லச் சிறந்தது ஊக்கமே யாகும். அந்த ஊக்கம் இல்லாதார் வேறு யாது உடையவராயினும் உடையவர் ஆவாரோ?. ஆகார் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஊக்கம் உடைமையே உடையவர் என்னும் சிறப்பை ஒருவர்க்குத் தருவது. ஏனைய உடைமைகள் எல்லாம் உண்மையில் உடைமைகள் ஆகா.
|
|
Translation
|
|
'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.
|
|
Explanation
|
|
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.
|
|
Transliteration
|
|
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|