|
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெண்டிர் பெற்றாற் பெறின் - பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப் பெறுவாராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ் சிறப்புப் பெறுவர் - தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச்செய்யப் பெறுவர்.
தொண்டுசெய்தல் என்பது சொல்லெச்சம். கொண்டானைப் பேணும் பெண்டிர் மண்ணுலகத்தில் மட்டுமன்றி விண்ணுலகத்திலும் சிறப்படைவர் என்பது இதனாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பெண்களின் பெருஞ் சிறப்பாகிய கற்பு உள்ள பெண்களை மனைவியாக அடைந்தால், அப்படிப்பட்ட கணவன்மார்கள் தேவலோக இன்பத்தை இங்கேயே அடைவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பெண்டிர் தம்மைக் கொண்ட கணவனை வழிபட்டு வணங்கி வாழ்வாரானால், புத்தேளிர் வாழ்கின்ற உலகத்தில் அவரால் பெருஞ் சிறப்பினைப் பெறுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நல்ல கணவனைப் பெற்று அக்கணவனுக்குத் தொண்டுகள் செய்து வாழும் மகளிர் வானுலகத்திலும் பெரும் சிறப்பினைப் பெறும் தகுதியைப் பெறுவர்.
|
|
Translation
|
|
If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.
|
|
Explanation
|
|
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.
|
|
Transliteration
|
|
Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|