|
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார். (அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.
இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளை ; உலகு தழீஇ நிற்கும் - நாடு முழுதும் விடாது பற்றி நிற்கும்.
அன்பாக அரவணைத்துக் காக்கும் அரசனைக் குடிகளும் அன்பாகப் போற்றிநிற்பர் என்பது கருத்து.
அணைத்தல் இன்சொற் சொல்லுதலும் தளர்ந்த விடத்து வேண்டுவன கொடுத்துத் தாங்குதலும் . மாநில மன்னன் மூவேந்தருள் ஒருவனான பெருநில வரசன் . குறு நில மன்னர் , பெருநில மன்னர் என அரசர் இருதிறத்தினராதலால் , வேந்தனை மாநில மன்னன் என்றார் . கோல் , உலகு என்பன ஆகுபெயர் . கோல் என்ற தற்கேற்பச் சிறப்பாக ஆளுதலை ஓச்சுதல் என்றார் . ஓச்சுதல் உயர்த்துதல் . குடி என்றது தளர்ந்த குடிகளை , 'தழீஇ' இன்னிசையளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை
நானிலமே போற்றி நிற்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அறிவையும் அறங்களையும் பாதுகாப்பதோடு அரசன் குடிகளின் அன்பையும் ஆதரவையும் அடைய வேண்டும்.) தன்னுடைய குடிமக்களின் விருப்பத்தை அனுசரித்து அரசாட்சி நடத்தும் பெரிய நாட்டின் மன்னவனுடைய பாதங்களிற் பணிந்து மக்கள் அவனை வணங்கி வாழ்த்துவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம் குடிமக்களை அனைத்துச் செங்கோல் செலுத்தும் பெருநில மன்னனது அடியைப் பொருந்தி உலகத்தோர் விடாது நிற்பர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
குடிமக்களைப் பேணிப் பாதுகாத்து நல்லரசு புரியும் மன்னவரின் அடிகளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடும் உலகு.
|
|
Translation
|
|
Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.
|
|
Explanation
|
|
The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.
|
|
Transliteration
|
|
Kutidhazheeik Kolochchum Maanila Mannan
Atidhazheei Nirkum Ulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|