Thirukural

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்.

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.)
மணக்குடவர் உரை:
குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின்; வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் - அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது. 'இல்' என்றது பயனின்மையை, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே". என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது.
கலைஞர் உரை:
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(குடும்பத்தின் பெருமைக்கு, மனைவி தான் காப்பாளி) குடும்பத்துக்குப் பெருமையுண்டாக்கக் கூடிய நற்குணங்கள் மனைவியிடத்தில் இல்லாமற் போனால் வேறு என்ன சிறப்புக்கள் எவ்வளவு இருந்தாலும் பயனற்றவையாகும்.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இல்லறத்திற்கேற்ற சிறப்பு மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்இல் வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயனுடையதில்லையாகும்.
தமிழ்க்குழவி உரை:
இல்லாள்கண் ஒரு குடும்பத்திற்கேற்ற இயல்பான நற்பண்புகள் அமையப் பெறாவிடின், வேறு என்ன பேறுகள் இருப்பினும், பயன் இல்லை
Translation
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is th
Explanation
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.
Transliteration
Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai Enaimaatchith Thaayinum Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 52