|
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.
இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னொடு தொடர்பற்ற ஒருவனை ஒருவழியாலும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு ; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு அவன் வழியினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
தொடர்பு தன் குடியோடியைந்த உறவு . தெளிதல் வினைத்தலைவனாக்குதல் . அவன் வினைக்கேட்டால் அரசனும் அவன் வழியினரும் அழிவர் என்பதாம் . நான்காம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன , தேரான்-எதிர்மறை முற்றெச்சம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து,
அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத
துன்பம் விளையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) ஆலோசிக்காமல் இன்னொருவரை நம்பிவிடுகிற வனுடைய வாழ்க்கை நெடுகத் தீராத துன்பமுள்ளதாகிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன்னுடன் தொடர்பு இல்லாதவனை ஆராயாமல் தெளிந்த (தேர்ந்து கொண்ட) அரசனுக்கு அச்செயல் அவன் சந்ததி முறையிலும் நீங்காத துன்பத் தினைக் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவரைப்பற்றி எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், தேர்ந்து பணிக்கமர்த்தின் தொடரும் செயல்பாடுகள் யாவும் தீரா துன்பத்தில் ஆழ்த்தும்.
|
|
Translation
|
|
Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.
|
|
Explanation
|
|
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.
|
|
Transliteration
|
|
Theraan Piranaith Thelindhaan Vazhimurai
Theeraa Itumpai Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|