|
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார். ('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக ; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் வேறு தொடர்பில்லாத வராதலால் ; பழிநாணார் - பழிக்கு அஞ்சார்.
பிள்ளைகளைப் பெறாதவர்க்குப் பிறரிடத்து அன்புண்டாகா தென்பதும் , உற்றா ருறவினரில்லாதவர்க்குப் பழிபளகு (பாவம்) பற்றிய அச்சமிராதென்பதும் , பொதுவான உலக நம்பிக்கை . ஆதலால் , அத்தகையோரை வினைக்கமர்த்தின் ,குடிகள் கெடுவதொடு பொறுப்பற்ற வினையால் அரசுங் கெடும் என்பதாம் . 'பற்றிலர்' என்பதனால் உறவினர் என்பது வருவிக்கப்பட்டது . ஓம்புதல் காத்தல் ; இங்கு நிகழாவாறு காத்தல்.
|
|
கலைஞர் உரை:
|
|
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள்
உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(முக்கியமாக) அன்பில்லாதவர்களை நம்பிவிடுவதை விலக்கவேண்டும். அவர்கள் யாரிடத்திலும் பற்றுடையவர்களாக நடந்துகொள்ள மாட்டார்கள்; பழி பாவங்களுக்கும் அஞ்சமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சுற்றம் இல்லாதவர்களைத் தெரிந்து அமைத்துக் கொள்ளுவதை நீக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் உலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் ஆன படியால் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தொடர்பு ஏதுமின்றி தனித்து இருப்பவர்களை நம்பித் தெளிதல் கூடாது. பற்றுகள் இல்லாத அவர்கள் பழிகளுக்கஞ்சும் பண்பில்லாதவராகவும் இருக்கலாம்.
|
|
Translation
|
|
Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.
|
|
Explanation
|
|
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.
|
|
Transliteration
|
|
Atraaraith Therudhal Ompuka Matravar
Patrilar Naanaar Pazhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|